கோவை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் கூடுதல் ஓட்டு மெஷின்கள் வரவழைத்த திட்டம்
கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 360 ஒட்டு சாவடிகள், சூலூரில் 385 ஓட்டு சாவடிகள். கவுண்டம்பாளையத்தில் 547 ஓட்டு சாவடிகள், கோவை வடக்கில் 339 ஒட்டு சாவடிகள், தொண்டாமுத்தூரில் 371 ஓட்டு சாவடிகள்,
கோவை தெற்கில் 233 ஓட்டு சாவடிகள், சிங்காநல்லூரில் 358 ஓட்டு சாவடிகள், கிணத்துக்கடவில் 377 ஓட்டு சாவடிகள், பொள்ளாச்சியில் 281, வால்பாறையில் 262 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
10 சட்டமன்ற தொகுதிகளில் 8,391 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5245 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 5885 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,521 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
10 சதவீதம் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டில் வைக்கப்படும் மெசின்களில் பழுது ஏற்பட்டால் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இந்த மெசின்களை ஆன்லைன் மூலமாக சமநிலைப்படுத்தி (ரேண்டமைசேஷன்) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒப்படைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் தொகுதிக்கு எனஎல்பி பாலிடெக்னிக் சூலூர் தொகுதிக்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகம் கோவை தெற்கு தான் சட்டமன்ற தொகுதிக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் குளத்தேரி வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கிணத்துக்கடவு தொகுதிக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி தொகுகிக்கு என்ஜிஎம் கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை தொகுதிக்கு ஆனைமலை தாசில்தார் அலுவலகம் போன்றவற்றில் ஓட்டு பதிவு மெஷின்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சப்ளை செய்யப்பட்டது. அங்கே ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் அதாவது வரும் ஏப்ரல் 7ம் தேதிக்கு பிறகு வேட்பாளர்கள். சின்னம் பொறுத்தும் பணி நடத்தப்படும். இப்போதுள்ள ஓட்டு பதிவு மெசின்களை ஒவ்வொரு தொகுதியிலும் 32 வேட்பாளர்கள் வரை போட்டியிட பயன்படுத்த முடியும்.
ஒரு ஓட்டு பதிவு மெசினில் நோட்டா உள்பட 16 வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்த முடியும். கூடுதலாக ஒரு வேட்பாளர் இருந்தாலும் கூடுதல் மெசின் தேவை. மாவட்ட அளவில் அனைத்து தொகுதிகளிலும் 32 வேட்பாளர்கள் வரை இருந்தால் சமாளிக்க முடியும்.
இல்லாவிட்டால் கூடுதல் ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்) தேவைப்படும். அப்படி வேட்பாளர்கள் அதிகமாக இருந்து தேவை ஏற்பட்டால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்று அருகேயுள்ள மாவட்டம் அல்லது மாநிலங்களில் இருந்து கூடுதல் ஓட்டு பதிவு மெசின்களை பெற திட்டமிடப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருப்பதால் நிறைய வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகும் சிலர் வாபஸ் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையிலும் தேர்தல் பிரிவினர் உள்ளனர். இருப்பினும் கூடுதல் ஓட்டு மெசின்கள் தேவைக்கு ஏற்ப வரவழைக்க தேர்தல் பிரிவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
