கோவை அதிமுகவில் பாஜக சீட் ஒதுக்கீட்டால் சிக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் கோவை வடக்கு பாஜகவுக்கு ஒதுக்கீட்டாங்களாம்.

கோவை தெற்கு தொகுதியின் பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நின்னா தோத்து போயிருவாங்கன்னு ‘பீல்ட் சர்வே’ எடுத்தப்போ தெரிஞ்சு போச்சாம். பயந்து போன வானதி வடக்கு தொகுதி கேட்டு அடம் புடுச்சாராம் ஆனா தர மறுத்துட்டாங்களாம்.

மேலிடத்திற்கு தகவல் போயி கட்டாயம் வடக்கு தான் வேணும்னு கேட்டு வாங்கி அறிவிச்சாங்களாம். ஆனா பக்காவா இருந்த அதிமுக கூட்டணி சீட்டு மொத்தமாக விரிசல் ஆகி போயிருச்சாம். ஏன்னா, கோவை வடக்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கோவை தெற்குக்கு போகலாம்னு பிளான் போட்டிருந்தாராம்.

வடக்கு தொகுதி பீல்ட் சர்வேல அவர் நின்னா தோத்துருவாருன்னு ரிப்போர்ட் வந்திருச்சாம். நம்ம பழைய தொகுதி வடக்கு தானே என அங்கே போய் ஜெயிக்கலாம்னு நினைச்சாராம். ஆனா அந்த ஆசை நிறைவேறாம போயிருச்சாம். அதே நேரத்தில் ஒரு வருஷம் கட்சியிலிருந்து விலகியிருந்த எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் கோவை வடக்கு தொகுதி கேட்டிருந்தாராம்.

அவருக்கு தலைமை ஒப்புதல் தந்த பின்னாடி தான் கட்சியில் மறுபடியும் சேர்ந்தாராம். இல்லாம இருந்தா அவர் திமுக அல்லது விஜய் கட்சிக்கு போயிருப்பாராம் அவரோட ஆசையும் வானதியால நிறைவேறாம போச்சாம்.

பாஜகவுக்கு கிணத்துக்கடவுல வீக்கா இருக்குது, சூலூர் போகலாம்னு சிட்டிங் எம்எல்ஏ தாமோதரன் ஆசைப்படராம். சூலூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ கந்தசாமியும் தொகுதி நிலவரம் சரியில்லைன்னு புலம் பிட்டு இருக்கிறாராம், ஆனா தொகுதிய விட்டதர மாட்டீங்கறாராம்.

அதே தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.ம் வேலுச்சாமி நிக்க சான்று கேட்டு இலவு காத்த கிளி மாதிரி இருக்கிறாராம். சிங்காநல்லூர் கிடைச்ச கூட பரவாயில்லை என்றாராம். ஆனா சிங்காநல்லூர்ல. யார் நிக்கிறதுன்னு கே.ஆர் ஜெயராமன், சிங்கை ராமச்சந்திரனுக்கும் கடுமையா மோதல் நடக்குதாம்.

மேட்டுப்பாளையம் தொகுதி செல்வராஜை கோபிக்கு பொறுப்பாளராக போட்டாங்களாம். அங்கே போக மாட்டேன்னு செல்வராஜ் அடம் பிடிக்கிறாராம். எதாவது பிரச்னையில் நம்ம தொகுதியை பறிச்சுடுவாங்களா என கவுண்டம்பாளையம் தொகுதி பிஆர்ஜி அருண்குமார் பயத்துல இருக்கிறாராம்.

வானதி அக்காவால் மொத்த கோவை மாவட்டமும் தொக்க மாட்டி தொங்குதாம்.. இதை தீர்க்க முடியாம எஸ்பி வேலுமணி புலம்பிட்டு இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *