கோவையில் யூரியா கடத்தலில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது…

கோவையில் இருந்து கேரளத்திற்கு 25 டன் மானிய விலை யூரியா கடத்தல் வழக்கில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முக்கிய குற்றவாளியை கேரளாவில் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

மதுக்கரை ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி சந்திப்பு அருகே. கடந்த மாதம் 28ம் தேதி காலை வேளாண்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், லாரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘பாரத் யூரியா 556 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு மூட்டையிலும் 45 கிலோ வீதம் மொத்தம் 25,020 கிலோ, அதாவது சுமார் 25 டன் யூரியா இருந்தது. இதையடுத்து ரூ. 1.48 லட்சம் மதிப்பிலான பூரியா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி மரியமுத்து உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்.ஐ. கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை கேரளத்தில் உள்ள முக்கிய குற்றவாளியை பிடிக்க நேரடியாக சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து கண்காணித்து, கேரளம் பெரம்பாவூரை சேர்ந்த முகமது பாசில் (40) என்பவரை வளைத்து பிடித்து இன்று காலை கோவை அழைத்து வந்தனர். கேரளம் பெரும்பாவூர் என்ற பகுதியில் கடத்தல் யூரியாவை வாங்கி, பிளைவுட் தொழிற்சாலைக்கு தேவையான ரெசின் என்ற கலவையை தயாரிக்க சுமார், 400 தொழில்நிறுவனங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் லாரி டிரைவர்கள் கடலூரை சேர்ந்த மணிகண்டன் (29), பூங்காவணம் (32), யூரியா விற்பனை செய்த கணேஷ்மூர்த்தி (33) மற்றும் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் பொள்ளாச்சி தனபால் (35) ஆகிய 4 பேர் முன்பே கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், யூரியாவை மொத்தமாக கொள்முதல் செய்யும் கேரளத்தை சேர்ந்த முகமது பாசிலும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

One thought on “கோவையில் யூரியா கடத்தலில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *