கோவையில் யூரியா கடத்தலில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது…
கோவையில் இருந்து கேரளத்திற்கு 25 டன் மானிய விலை யூரியா கடத்தல் வழக்கில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முக்கிய குற்றவாளியை கேரளாவில் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். மதுக்கரை ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி சந்திப்பு அருகே. கடந்த மாதம் 28ம் தேதி காலை வேளாண்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், லாரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘பாரத் யூரியா 556 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது….
