கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு தமிழக முதல்வர் பங்கேற்பு

முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு

கோவை மாநகரில் காந்திபுரம் சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

சிறைச்சாலை வளாகத்திலேயே முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடத்தப்பட்டது.

செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு சிற்பங்கள். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் உள்ளிட்ட உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

செம்மொழி வனம் மூலிகை தோட்டம். மகரந்த தோட்டம் நீர்த் தோட்டம் மணம்கமிழ் தோட்டம் பாலைவனத் தோட்டம் மலர்த் தோட்டம் மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம் ரோஜா தோட்டம் பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளரு மரம். கடல் திராட்சை திருவோட்டு மரம் கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன.

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு 2000 க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம் 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம் பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை உணவகம் ஒப்பனை அறை சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள் 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்: 4000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு (Terrarium) குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி

பரப்பளவில் சதுர விளையாட்டுத்திடல் சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. விளையாடுவதற்கு போன்ற பல்வேறு எதுவாக தனித்தன்மையான பொழுதுபோக்கு வசதிகளும்

இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம் இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாகப் படிப்பகம் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் QR குறியீடுகள் மற்றும் Harcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செம்மொழிப் பூங்கா கோவை சுற்றுச்சூழலைப் பராமரிக்கிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வுப் பணிகளுக்கு உதவுகிறது. மொத்தத்தில் தமிழ்நாட்டின் தாவர உயிரினங்களைப் பாதுகாக்கும் களமாகத்திகழ்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *