கோவையில் செந்தில் பாலாஜி ஜெயிக்க முடியாது : எஸ் பி வேலுமணி பேட்டி
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிமுக ஆட்சி காலத்தில் அதிக திட்டங்களை கொடுத்து 50 ஆண்டு கால வளர்ச்சியை எடப்பாடியார் 5 ஆண்டுகளில் கொடுத்தார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம், அவினாசி ரோடு மேம்பாலம் போன்ற செய்ய முடியாத திட்டத்தை கூட செய்து காட்டினார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பார்.
திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலமாக எந்த திட்டமும் கோவைக்கு தரவில்லை. கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் இண்டி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.
திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கட்டாயம் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வருவோம். குடிநீர் வரி, சொத்து வரி மின் கட்டண உயர்வு மிக அதிகமாக இருக்கிறது.
கோவையில் குப்பைக்கு கூட வரி போடுகிறார்கள். திமுக ஆட்சி மற்றும் செயல்பாட்டில் அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள் என கூறினார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். அப்போது தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில்பாலாஜி பேட்டியிடும் விவரம் தொடர்பாக கேட்டபோது
அவர், அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு ஏராளமான திட்டங்களை நிறைய கொடுத்து இருக்கிறோம்.
கோவையில் எங்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் சரி எடுபடாது. கோவை அ.தி.மு.க. கோட்டை .மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வருவது உறுதி என்றார்.
