தேர்தலில் ஓட்டு போட 12 ஆவணங்கள் பயன்படுத்த அனுமதி…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்து கீழ்கண்ட வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
வாக்காளர்கள் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 62-ஆம் பிரிவின் கீழ் அவர்களுடைய உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக, வாக்காளர்கள், ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுக்கிற நோக்கத்துடன், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் 61-ஆம் பிரிவு வழிவகை செய்துள்ளது.
வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஒரு வழியாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளுடன் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1961 தேர்தல் நடத்தை விதிகள் 49H(3), 49K(2)(b) மற்றும் 1960 வாக்காளர் பதிவு விதி 28 ன்படி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள தொகுதி ஒன்றின் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) கட்டாயம் அளிக்க வேண்டும்.
மேலும், 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20A-இன்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்களிக்கும் போது, வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.
இதற்காக, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினை பயன்படுத்தி ஆளறி அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட ஆவணத்தினை வாக்காளரால் அளிக்க இயலாத நேர்வுகளில், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால், பட்டியலிடப்பட்டுள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.
- ஆதார் அட்டை.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி
- புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
- தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.
- ஓட்டுநர் உரிமம்.
- வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card).
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை.
- இந்திய கடவுச்சீட்டு.
- புகைப்படத்துடன் படிய ஓய்வூதிய ஆவணம்.
- மத்திய / மாநில நிறுவனங்கள் / நிறுவனங்களின் அரசுகள் / பொதுத் துறை வரையறுக்கப்பட்ட பொது தொழிகாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.
- பாாரளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடைய அட்டை மற்றும்
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும்போது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆளறி ஆவணமாக பயன்படுத்திடுமாறும், அத்தகைய ஆவணத்தை அளிக்க இயலாத நேர்வுகளில் மேலே குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனுமொரு ஆவணத்தினை ஆளறி ஆவணமாக பயன்படுத்தி 100% வாக்கினை உறுதி செய்ய வேண்டும் என கோவை மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
