கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் இதுவரை 32 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காலை இமெயிலில் ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகம் கோவை மாவட்டத்தில் ஆறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் போன்றவற்றுக்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

18 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது மதியம் வெடித்து சிதறிவிடும் என இமெயிலில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது எதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் குழுவினர் அந்த அலுவலகங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது வழக்கம்போல் புரொளியாக இருந்ததால் புரளியாக இருந்ததால் அதிகாரிகள் விரக்தி அடைந்தனர் தேர்தல் நேரத்திலும் மர்மகும்பல் தொடர்ந்து இதுபோல் மிரட்டல் விடுத்து வருவது போலீசார் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் தவிப்படைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *