வெள்ளிங்கிரி மலையில் டிரைவர் சாவு

சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). வேன் டிரைவரான இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று கோவை வந்தார். இரவு இவர் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறினார்.

இரண்டாவது மலை ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் வெள்ளிங்கிரி மலை ஏறிய சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பதாக தெரிகிறது. இதுவரை ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர்.

மலையேறும் நபர்களுக்கு உடல் நலன் பரிசோதனை செய்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் குறைந்த வயது உடைய பக்தர்கள் மலையேறும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *