கோவை மாவட்டத்தில் 130 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் முதல் நாளான 30ம் தேதி 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 2ம் தேதி 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று 3வது நாளாக 130 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 108 ஆண்கள், 22 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சிலர் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

மாவட்ட அளவில் இதுவரை 172 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கவுண்டம்பாளையத்தில் 16 பேர், சூலூரில் 14 பேர், கவுண்டம்பாளையத்தில் 15 பேர், கோவை வடக்கில் 12 பேர், தொண்டாமுத்தூரில் 34 பேர், கோவை தெற்கில் 30 பேர், சிங்காநல்லூரில் 16 பேர், கிணத்துக்கடவில் 13 பேர், பொள்ளாச்சியில் 15 பேர், வால்பாறையில் 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்ய கடைசி நாள். இந்த நாளில் திமுக, அதிமுக கட்சியினர் மனு தாக்கல் செய்யவுள்ளனர். முகூர்த்த தினமாக இருப்பதால் இந்த நாளில் மனு தாக்கல் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *