கோவை மாவட்டத்தில் 450 பேர் வேட்பு மனு… ஒரே நாளில் 172 பேர் மனு தாக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இறுதி நாளாக வேட்பு மனு தாக்கல் நடந்தது.

இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 32 பேரும், சூலூரில் 18 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 18 பேரும், கோவை வடக்கில் 37 பேரும், தொண்டாமுத்தூரில் 43 பேரும்,

கோவை தெற்கில் 31 பேரும், சிங்காநல்லூரில் 28 பேரும், கிணத்துக்கடவில் 30 பேரும், பொள்ளாச்சியில் 19 பேரும், வால்பாறையில் 22 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இன்று ஒரே நாளில், மாவட்ட அளவில் 274 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 4ம் தேதி மாவட்ட அளவில் 130 பேரும். 2ம் தேதி 27 பேரும், கடந்த மாதம் 30ம் தேதி 15 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதுவரை மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்தூரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும், சிங்காநல்லூரில் 44 பேரும்,

கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு ஓட்டு பதிவு மெசினில் 16 வேட்பாளர்கள் பெயர், சின்னம். பொருத்த முடியும். இப்போதுள்ள வேட்பு மனு அடிப்படையில் பார்த்தால் அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் 2 முதல் 4 ஓட்டு பதிவு மெசின்கள் தேவைப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கு 8391 ஓட்டு பதிவு மெசின்கள் மட்டுமே இருக்கிறது. 5245 கட்டுபாட்டு மெசின்கள், 5885 சின்னம் சரி பார்ப்பு மெசின்கள் இருக்கிறது.

இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், ” வேட்பு மனுக்கள் சரி பார்ப்பு பணி இன்று நடத்தப்படும். இதில் தகுதியற்ற வேட்பு மனுக்கள் அபிடவிட் இல்லாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும். நாளை வேட்பு மனு வாபஸ் வாங்க அனுமதிக்கப்படும் .

வாபஸ் பெற்ற பின்னரே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். கூடுதல் ஓட்டு மெசின்கள் தேவைப்படும் நிலை இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்து விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *