கோவை மாவட்டத்தில் வரும் 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஐ.ஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும், துணை பட்டியலில் இடம் பெற்றவர்களும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இறுதி பட்டியல் வெளியான பின்னரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க சில ஆயிரம் விண்ணப்பம் வழங்கியிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் துணை பட்டியலுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதில் துணை பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படாம இருப்பதாக தெரிகிறது. இவர்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி ஒட்டு போடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
