செந்தில் பாலாஜி ஜெயிப்பாரா…
jai .. . chief correspondent
கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் புளியகுளம், சவுரிபாளையம், மருதூர், ராமகிருஷ்ணாபுரம் , கணேசபுரம், ராமநாதபுரம் , காமராஜர் ரோடு, அனுப்பர்பாளையம் , ரங்கநாதபுரம், காந்திபுரம், சித்தாபுதூர், ராம் நகர் , என் ஹெச் ரோடு, இஸ்மாயில் வீதி,
பெரிய கடைவீதி ,ஈஸ்வரன் கோயில் வீதி ,ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, ஒக்கலிகர் வீதி, ம ந க வீதி , பவள வீதி , குலாலர் வீதி , தெப்பக்குளம் வீதி, மில் ரோடு, செல்வபுரம், பொன்னையராஜபுரம், ராமலிங்கம் காலனி, அழகேசன் ரோடு, கிராஸ் கட் ரோடு, நஞ்சப்பா ரோடு, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இருக்கிறது.
283 ஓட்டு சாவடிகள் கொண்ட இந்த தொகுதியில் 1,86,509 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 63 ஓட்டுச்சாவடிகள் சிறுபான்மை இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 15 முதல் 16 சதவீதம் பேர் சிறுபான்மையின மக்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொது பார்வைக்கு இந்த தொகுதி ‘இஸ்லாமியர்களின் பெல்ட்’ என அறியப்படுகிறது. ஆனால் உக்கடம் ,கரும்பு கடை , ஆத்துப்பாலம், குனியமுத்தூர், போத்தனூர், செல்வபுரம் , பூ மார்க்கெட் போன்ற பகுதிகள் கோவை தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, கிணத்துக்கடவு போன்ற தொகுதி எல்லைக்குள் வருகிறது.
இஸ்லாமியர்களின் ஓட்டுகள் 5 தொகுதிகளில் பகிரப்படும் நிலைமை இருக்கிறது. கடந்த 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 59,788 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் 42,369 ஓட்டுகளும்
பாரதிய ஜனதா கட்சி வானதி சீனிவாசன் 33,113 ஓட்டுக்களும் மா கம்யூனிஸ்ட் கட்சி பத்மநாபன் 7248 ஓட்டுக்களும் பெற்றனர். 17419 ஓட்டு வித்தியாசத்தில் அம்மன் அர்ஜுனன் வெற்றி பெற்றார்.
இதேபோல் கடந்த 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
பாரதிய ஜனதா கட்சி வானதி சீனிவாசன் 53209 ஓட்டுக்களும், மநீம கமலஹாசன் 51481 ஓட்டுக்களும் ,காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 42383 ஓட்டுக்களும் பெற்றனர்.
கடந்த இரண்டு முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரே அளவிலான ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது சொல்லி வைத்தது போல் 42,300 ஓட்டு என்ற அளவை இந்த கூட்டணி கட்சி தாண்டவில்லை.
இஸ்லாமியர்களின் ஓட்டு கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக தனது கூட்டணி கட்சியுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தங்களுக்கு கிடைத்த ஓட்டு அதாவது தங்களது கட்சி ஓட்டு மட்டும் கிடைத்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என நினைத்து தைரியமாக களம் இறங்கி உள்ளது.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை விட தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனனுக்கு செல்வாக்கு அதிகம். வீடு வீடாக வீதி வீதியாக மக்களின் பரிச்சயம் உள்ளவர். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் தன்னை அணுகலாம் எந்த உதவியும் செய்வார் என்ற பெயர் கொண்டவர்.
மிகவும் எளிமையானவர். அவர் தனது தொகுதியை வானதிக்கு விட்டு தந்தாலும் தெற்கு தொகுதியில் அடிக்கடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உதவியுள்ளார்.
மிகவும் பிரபலமானவர் செல்வாக்கு மிக்கவர் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற பெருமையுடன் செந்தில் பாலாஜி களத்தில் குதித்தாலும் அவருக்கு பலகீனமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அவரை சந்திப்பது, பேசுவது சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. மேலும் அவர் அரவக்குறிச்சி , கரூர் தொகுதியை விட்டு கோவைக்கு புதிதாக வேட்பாளராக வந்துள்ளார். கோவை மண்டல திமுக பொறுப்பாளராக இருந்தாலும் அவர் கோவையில் இருந்த நாட்கள் மிகவும் குறைவு தான். மேலும் இந்த முறை இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை இன மக்களின் ஓட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணக்குகளை எல்லாம் சரி பார்த்து சூழ்நிலையை கணக்கிட்டால் செந்தில் பாலாஜியின் வெற்றி சிக்கலான இடியாப்பம் போல் இருக்கிறது. அம்மன் அர்ஜுனன் பலமான வேட்பாளரை எதிர்க்கிறோம் என்ற பயமின்றி அசால்டாக வேலை செய்து வருகிறார்…
கரூர் குரூப் களமிறங்கி கலக்கினாலும் வேலுமணி குரூப் வேட்டையாடி விளையாடும் என கோவை மக்கள் நம்பிக்கையாக தெரிவித்துள்ளனர். சமீப நாட்களில் கோவையில் நடந்த வாக்காளர்களின் கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்களும் ‘மாற்றம் வேண்டும்’ என்ற மக்களின் நோக்கம் பரவலாக பரவி வருகிறது. இது அலையாக மாறினால் வெற்றி அதிமுக வசமாகிவிடும்.
யாராக இருந்தாலும் வெற்றியை எட்ட விவேகமாக செயல்பட வேண்டிய கள சூழல் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.
