கோவையில் ‘பேலட் பேப்பர்’ அச்சடிக்கும் பணி தீவிரம்
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது.
மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது.
ஒரிரு நாளில் இந்த பேலட் பேப்பர் வந்து விடும். வரும் 14ம் தேதி முதல் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்ட ஓட்டு மெசின்களில் இந்த பேலட் பேப்பர் பொருத்தப்படும். பின்னர், அந்த மெசின்கள் பாதுகாப்பாக ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்படும்.
23ம் தேதி தேர்தல் நடத்தும் போது அதற்கு முந்தைய நாள் இந்த மெசின்கள் வெளியே எடுக்கப்படும்.
மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகளுக்கு ஓட்டு மெசின்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேலட் பேப்பர் அச்சடிக்கப்படுகிறது. 10 சதவீதம் பேப்பர் ரிசர்வ் நிலையில் இருக்கும். இந்த பேப்பர் அச்சடித்து அனைத்து ஒட்டு மெசின்களிலும் முறையாக பொருத்தப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
