பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகை…!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார்.
கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி தொகுதியை சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் 9 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேச உள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மற்றும் 18ம் தேதி போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்படும். பதினெட்டாம் தேதி மாலை 4 மணிக்கு அவர் பொதுக்கூட்டத்தில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் கோவை நகர் பகுதியில் குறிப்பாக விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதமர் தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் கோவை வர இருப்பது பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
