கோவை மாவட்டத்தில் 14 முதல் 22 ரவுண்ட்ஸ் ஓட்டு எண்ணிக்கை…!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.
இதில் மாவட்ட அளவில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மையம், ஸ்ட்ராங்க் ரூம் பகுதிகளில் மட்டும் 300 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் ஒரு தாசில்தார் தலைமையில் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான மற்றொரு குழுவினரும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது பதிவேட்டில், பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான விவரங்களை பதிவு செய்தார் தினமும் அவர் இந்த எண்ணிக்கை மையம் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
எண்ணிக்கை மையத்தில் 14 முதல் 22 ரவுண்ட் டேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள், கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டது
எண்ணிக்கை மையம் ஸ்டிராங்க் ரூம் தொடர்பான விவரங்கள், வரைப்படங்கள் தயாரித்து அதை அந்த வளாகத்தின் முன் ஒட்டி வைக்கப்பட்டது. எண்ணிக்கை மையங்கள் கடந்த காலங்களில் இருந்ததை போல் அமைக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர்கள் ஏஜன்டுகள் ஒட்டு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிப்பு கேமராவில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில் “ஏற்கனவே வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் இருக்கிறது. மெசின்களை கண்காணிக்க, கவுண்டிங் சென்டர் பகுதியில் கூடுதல் கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டிங் பணியில் உள்ள அலுவலர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி வழங்கப்படும்.
தபால் ஒட்டு பிரித்து எண்ணுவதற்கு 4 டேபிள் போடப்படும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை சரியாக துவக்கப்படும் முதலில் அரைமணி நேரம் தபால் ஒட்டுக்கள் எஜன்டுகள் முன்னிலையில் பிரித்து எண்ணப்படும். அதற்கு பின்னர் 8.30 மணிக்கு ஒட்டு மெசின்கள் திறக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படும் ஓட்டு மெசின்கள் சுழற்சி முறையில் எடுத்து எண்ணப்படும்.
இதில் சரியான நடைமுறை பின்பற்றப்படும். ஒரு மெசினில் உள்ள ஒட்டுக்கள் ஒரு முறை மட்டுமே எண்ணி விவரங்கள் தெரிவிக்கப்படும். சந்தேகம் என தெரிவித்தால் மறு முறை எண்ணப்படமாட்டாது, தபால் ஓட்டுக்கள் முழுமையாக எண்ணி முடிக்காவிட்டாலும் ஓட்டு மெசினில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும்.
ஓட்டு பதிவு விவரங்கள் ரவுண்ட் வாரியாக www.election commission of india என்ற வெப்சைட்டில் தேர்தல் முடிவு பகுதியில் வெளியிடப்படும். பொதுமக்கள் ரிசல்ட் முன்னணி விவரங்களை அறியலாம், ” என்றனர்.
