ஓட்டு எண்ணிக்கை நடத்துவது எப்படி? வரும் 29ம் தேதி அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,228 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரும்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மையம் ஸ்ட்ராங்க் ரூம் பகுதிகளில் மட்டும் 300 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் ஒரு தாசில்தார் தலைமையில் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 10 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் குழு தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எண்ணிக்கை மையத்தின் முக்கிய பொறுப்பாளராக இருப்பார். இவர் வெற்றி சான்று வழங்குவார். ஒவ்வொரு எண்ணிக்கை மையத்திலும் அந்தந்த தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் முடிவு எடுக்கும் அதிகாரியாக இருப்பார்.

இது தவிர உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவுண்டிங் பிரிவு அலுவலர்கள் டேட்டா என்ட்ரி அலுவலர்கள், போலீசார், ஸ்ட்ராங்க் ரூம் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 100 முதல் 120 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர்.

இவர்களுக்கு வரும் 29ம் தேதி கோவையில் ஓட்டு எண்ணும் நடைமுறை தொடர்பாக பயிற்சி வழங்கப்படும். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணிக்கையின் போது அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது எண்ணிக்கை மையத்தில் 15 முதல் 2 டேபிள் அமைக்கப்படும்.

அங்கே மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள், கண்காணிப்பு கேமரா இருக்கும். வேட்பாளர்கள், ஏஜன்டுகள் ஓட்டு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிப்பு கேமராவில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

தபால் ஓட்டு பிரித்து எண்ணுவதற்கு 4 டேபிள் போடப்படும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை சரியாக துவக்கப்படும் முதலில் அரைமணி நேரம் தபால் ஓட்டுக்கள் ஏஜன்டுகள் முன்னிலையில் பிரித்து எண்ணப்படும். அதற்கு பின்னர் காலை 8.30 மணிக்கு ஓட்டு மெசின்கள் திறக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படும்.

ஒட்டு மெசின்கள் சுழற்சி முறையில் எடுத்து எண்ணப்படும். இதில் சரியான நடைமுறை பின்பற்றப்படும். ஒட்டு மெசின்களை ரகசிய பேப்பர் தாள்களை நீக்கும் முன் ஏஜன்டுகளிடம் காட்ட வேண்டும் . பின்னர் பேப்பர் கட்டர் வைத்து பேப்பர்களை நீக்க வேண்டும். அனைத்து ரகசிய பேப்பர்களை கீழே போடக்கூடாது. அதற்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் போட வேண்டும்.

மெசின்களில் பதிவான ஓட்டுக்களை வரிசைப்படி எண்ண வேண்டும். ஓட்டுக்களை ஏஜன்டுகளிடம் காட்ட வேண்டும். சரியாக தெரியாவிட்டால் திரும்ப காட்டலாம். முறையாக கடைசி வேட்பாளர் வரை எண்ணி விவரங்களை தெரிவித்த பின்னர் மெசினை தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைக்க வேண்டும்.

ஒரு மெசினை எண்ணி முடித்த பின்னர் அடுத்த மெசினை எண்ண வேண்டும். ஒரே நேரத்தில் 2 மெசின்களை வாங்கி வைத்திருக்க கூடாது. எண்ணிக்கையின் போது தவறு இருக்க கூடாது, மொத்த எண்ணிக்கையை கூட்டி சரி பார்க்க வேண்டும். பதிவான வாக்குடன் மொத்த எண்ணிக்கை ஒத்து போகிறதா என உறு செய்ய வேண்டும்.

சந்தேகம் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆலோசிக்கலாம். அதிகாரி உத்தரவு இன்றி ஒட்டு எண்ணிக்கையை நிறுத்த கூடாது. உரிய நேரத்திற்குள் ஒவ்வொரு சுற்றுக்களையும் முடிக்க வேண்டும் விவரங்களை கரும்பலகையில் வெளியிட வேண்டும் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எந்த அலுவலரும் டேபிள் மாறி சென்று ஒட்டு எண்ணிக்கையில் ஈடுபட கூடாது. விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மெசின்களை தவறாக கையாள கூடாது என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அலுவலர்களிடம் டெமோ மெசின் காட்டி பயிற்சி தருவோம், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *