கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… Anti terrorism squad விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை இமெயில் மிரட்டல் வந்தது.

இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் .

தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது.

தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இந்த புகார் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இமெயில் மூலமாக மிரட்டல் விடுத்த குழுவினர் டார்க் நெட் என்ற வெப்சைட் பயன்படுத்துவதாக தெரிகிறது . இந்த தளத்திலிருந்து மெயில் அனுப்பினால் பல நாடுகளில் இருந்து அனுப்புவது போன்ற தோற்றம் இருக்கும். இதை யார் அனுப்பினார்கள் என கண்டறிய முடியாது. எனவே இதை சிறப்பாக கவனித்து விசாரிக்க ATS என்ற anti terrorism squad என்ற தீவிரவாத தடுப்பு குழு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது .

இந்த குழுவினர் வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர் குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர். கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பாஸ்போர்ட் தபால் அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்கும் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.

கலெக்டர் அலுவலகத்திற்கு 35 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர் மிரட்டல் காரணமாக பரபரப்பு நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *