எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி தேர்தல் செலவு கணக்கு தாக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்தது.

வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த நிலையில் மாவட்ட அளவில் தேர்தலில் போட்டியிட்ட குறிப்பாக 10 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை நான்கு நாட்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்களின் செலவு கணக்குகள் பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 110க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

சிலர் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை. பிரதான கட்சி வேட்பாளர்களும் 3 அல்லது 4 வகையான கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சில வேட்பாளர்கள் ஓரிரு முறை மட்டுமே கணக்கு விவரங்களை ஒப்படைத்தனர். சில வேட்பாளர்கள் உரிய முறையில் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

அடுத்த மாதம் 26ம் தேதி வரை செலவு கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை உரிய ஆதாரம் மற்றும் ரசீதுகளுடன் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் கணக்கு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒரு வேட்பாளர் 40 லட்ச ரூபாய் வரை செலவு செய்யலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் பலர் இதில் பாதியாளருக்கு கூட அளவிற்கு கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் 10 லட்ச ரூபாய்க்கு குறைவாக இந்த தேர்தலில் செலவு செய்திருப்பதாக தெரிகிறது. இதா வேட்பாளர்களும் அனுமதிக்கப்பட்ட செலவு தொகையில் மிக குறைவாக மட்டுமே செலவு செய்துள்ளனர். இதன் விவரங்களை தேர்தல் கணக்கு பிரிவினர் மற்றும் கணக்கு அப்சர்வர் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *