ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள்… கோவையில் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் யன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது .

ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 70 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மையம், ஸ்ட்ராங்க் ரூம் பகுதிகளில் மட்டும் 300 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் ஒரு தாசில்தார் தலைமையில் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 10 தொகுதிகளுக்கான ஒட்டு எண்ணிக்கை அலுவலர்கள் குழு தயார் செய்யப்பட்டுள்ளது. இது தவிர எண்ணிக்கை மையத்தில் மின் வாரியம், தீயணைப்பு, போலீஸ், பொதுப்பணித்துறை, மாநகராட்சி மற்றும் பல்வேறு துறையினர் பணியில் இருப்பார்கள்.

இவர்களின் பணி தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டக்கில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி எண்ணிக்கை மையத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். கவுண்டிங் பிரிவு அலுவலர்கள், டேட்டா என்ட்ரி அலுவவர்கள், போலீசார், ஸ்ட்ராங்க் ரூம் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் 14 டேபிள் அமைத்து ஒட்டு எண்ணப்படும் கவுண்டம்பாளையம் தொகுதியில் 22 டேபிள் அமைக்கப்படும். மின் வாரியத்தினர் தடையின்றி மின் சப்ளை செய்ய வேண்டும். ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணிகளை முறையாக செய்ய வேண்டும். அந்தந்த தொகுதிக்கு உட்பட்டவர்கள் மற்ற தொகுதிகளுக்குள் தடையை மீறி செல்ல கூடாது.

வாகனங்களை வன அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். வேட்பாளர்களின் ஏஜன்டுகள் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டால் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணிக்கை மையத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களை விடக்கூடாது. போலீசார் பாதுகாப்பில் கவன குறைவாக இருக்க கூடாது.

ஓட்டு எண்ணிக்கையின் போது தவறான முடிவுகளை தெரிவிக்க கூடாது, மெசின்களை எண்ணும் போது இரு வேட்பாளர்களின் ஓட்டுக்கள் ஏறக்குறைய சம் நிலையில் இருந்தால், மெசின்களில் பழுது இருந்தால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று சின்னம் காட்டும் கருவியில் உள்ள சின்னங்களை எண்ணி முடிவு அறிவிக்கலாம். 3 முதல் 5 சதவீதம் ஓட்டு வித்தியாசம் இருந்தால் சின்னங்களை எண்ணலாம். இதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும் என் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *