KCP infra நிறுவனம் கட்டமைத்த சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூனில் திறப்பு…!
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி பகுதியில் 1140 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி பாதையாக மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது.
52.90 கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் முதல் எருக்கம்பெனி வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு, என்எஸ்.ஆர் ரோடு, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக இந்த மேம்பாலம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பணி நடத்தப்பட்டு வந்தது. இந்த பணி விரைவில் முடிவடையும். 17:50 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. கோவையை சேர்ந்த பிரபலமான kcp infra limited நிறுவனம் ‘இபிசி’ முறையில் இந்த மேம்பாலத்தை கட்டமைப்பு செய்துள்ளது
22 தாங்கு தூண்கள் மற்றும் 52 மீட்டர் கர்டர் அமைத்து மேம்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வீஸ் ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டு மேம்பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், “பணிகள் இறுதி கட்டத்கை எட்டி இருக்கிறது. வடக்கு பகுதியில் இன்னும் 100 மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிய வேண்டி இருக்கிறது.
மேம்பாலத்தின் மொத்த பணியும் நிறைவு நிலையை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு மாக காலம் பணி நடத்தப்படும். வரும் ஜூன் மாதம் மேம்பாலம் திறப்பு விழா செய்யப்படும். அதற்கு தேவையான வகையில் ஒப்பந்த நிறுவனம் வேகமாக பணிகளை முடித்திருக்கிறது. கடந்த காலங்களில் மேம்பால கட்டுமான பணியில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது.
குடிநீர் பிரதான குழாய்கள் இடையில் இருந்ததால் அகை அகற்றி பணி செய்ய வேண்டி இருந்தது. மேலும் உயர் கோபுர மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் இருந்தது. அதையும் வேறு இடத்துக்கு மாற்றி வைத்துவிட்டு அதன் பிறகு பணி செய்யப்பட்டது. மிக சவாலான பணிகளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் செய்து முடித்து இருக்கிறோம். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் சாய்பாபா காலனி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.” என்றனர்.
