கோவை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை…!

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதமாக வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்தது.

அதுவும் சமீப நாட்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி வெயில் வெளுத்து வாங்கியது. பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக தென்மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்தது.

மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் மழை கணிசமாக இருந்தது . சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது மழை பெய்யவில்லை .இருப்பினும் சீதோசன நிலை மாறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .கோவை மாவட்ட அளவில் வரும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது .இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *