கோவை மாவட்டத்தில் வாக்கு சாவடிகள், ஆவணங்கள் தயார்…
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தி 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள்,சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
மேட்டுப்பாளையம்; கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பதால் இரண்டு ஓட்டு பதிவு மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 864 ஓட்டு பதிவு மெசின்கள், 432 கன்ட்ரோல் யூனிட் 468 சின்னம் காட்டும் மெசின் என 1332 மெசின்கள் பயன்படுத்தப்படும்.
சூலூரில் 462 ஒட்டு பதிவு மெசின்கள், 462 கன்ட்ரோல் யூனிட், 500 சின்னம் காட்டு மெசின் என 1,424 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
கவுண்டம்பாளையத்தில் 656 ஓட்டு பதிவு மெசின்கள், 656 கன்ட்ரோல் யூனிட், 711 சின்னம் காட்டு மெசின்கள் என 2023 மெசின்களும்,கோவை வடக்கில் 812 ஓட்டு பதிவு மெசின்கள், 406 கன்ட்ரோல் யூனிட், 440 சின்னம் காட்டும் கருவி என 1,252 மெசின்களும் பயன்படுத்தப்படும். தொண்டாமுத்தூரில் 890 ஓட்டு பதிவு மெசின்களும், 445 கன்ட்ரோல் யூனிட்களும், 482 சின்னம் காட்டும் மெசின்களும், மொத்தமாக 1,372 மெசின்களும் பயன்படுத்தப்படவுள்ளது.
கோவை தெற்கில் 678 ஓட்டு பதிவு மெசின்களும், 339 கன்ட்ரோல் யூனிட், 367 சின்னம் காட்டும் கருவி என 1,045 மெசின்களும், சிங்காநல்லூரில் 858 ஓட்டு மெசின்களும், 429 கன்ட்ரோல் யூனிட், 465 சின்னம் காட்டும் கருவி என 1,323 மெசின்களும் பயன்படுத்தப்படும். கிணத்துக்கடவில் 452 ஒட்டு மெசின்கள்,
452 கன்ட்ரோல் யூனிட், 490 சின்னம் காட்டும் கருவிகள் என 1,394 மெசின்களும், பொள்ளாச்சியில் 337 ஓட்டு மெசின்கள், 337 கன்ட்ரோல் யூனிட், 365 சின்ன காட்டும் கருவி என 1,039 மெசின்களும், வால்பாறை தொகுதியில் 314 ஓட்டு மெசின்களும், 314 கன்ட்ரோல் யூனிட் 340 சின்னம் காட்டும் கருவி என 968 மெசின்களும் பயன்படுத்தப்படும்.
மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 6,323 ஓட்டு பதிவு மெசின்கள், 4,272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4,628 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மெசின்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக கட்டுபாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
நாளை காலை 11 மணி முதல் இந்த மெசின்கள் ஓட்டு சாவடிகளுக்கு வாகனங்களி அனுப்பி வைக்கப்படும். இதற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவினாசி ரோட்டில் உள்ள கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஓட்டு பதிவு மெசின்கள் எடுத்து செல்ல 300 ஜிபிஎஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
. அந்த வாகனங்களுக்கும் அடையாள எண் மற்றும் மண்டலம், சட்ட மன்ற தொகுதி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் உரிய வழித்தடங்களில்தான் செல்லவேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சீல் வைக்க உதவும் அரக்கு, மெழுகுவர்த்தி, நூல், பேனா, உள்பட 102 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியத்திற்குள் இந்த வாகனங்கள் ஓட்டு சாவடிக்கு சென்று சேர்ந்து விடும்.
