கோவையில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது
கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ராம்ஸ் மெடிக்கல் என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுவதாகவும் இந்த மருத்துவமனையில் விதிமுறை மீறி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் புகார் வந்தது .
இதைத்தொடர்ந்து சூலூர் அரசு மருத்துவமனையில் மூத்த டாக்டர் ராஜேஷ் என்பவர் அங்கே சென்று ஆய்வு செய்தார். கோவை மாவட்ட சுகாதார பணியில் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மருத்துவமனையை நடத்தி வரும் ராமநாதன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என தெரிய வந்திருக்கிறது.
இவர் வெறும் டிப்ளமோ மட்டும் படித்திருப்பதாகவும் டாக்டர் என சொல்லி மருத்துவமனை நடத்தி நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் செய்து வருவதாகவும் தெரியவந்தது டாக்டரே இல்லாத எவர் எப்படி மருந்து கொடுத்து நோயாளிகளை குணப்படுத்தினார். எவ்வளவு ஆண்டுகளாக இவர் மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது தொடர்பாக சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர் .
ராமநாதன் மீது சிங்காநல்லூர் போலீசில் புகார் தரப்பட்டது. இவர் சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் ரோடு கோமதி நகரை சேர்ந்தவர் எனவும் இவர் மீது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 படி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர் . போலி டாக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
