கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு…96.66 சதவீத தேர்ச்சி…!

கோவை மாவட்டத்தில் 2026ம் ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்தது.

இந்த பொதுத்தேர்வில் 96.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 35,448 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் .

இதில் 34,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் மட்டும் 16,235 பேர் தேர்வு எழுதியதில் 15,531 பேரும், மாணவிகள் 19,213 பேர் தேர்வு எழுதி 18,733 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.66 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.50 சதவீதமாகவும் இருக்கிறது.

கோவை கல்வி மாவட்டத்தில் 96.79 சதவீதமும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 96.17 சதவீதமும் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

மேலும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய மொத்தம் 158 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 13 அரசு பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 138 தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளில் வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, இடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆல்வெர்னியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஜி.ஆர்.ஜி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *