கோவையில் மூடிய டாஸ்மாக் பாரில் சரக்கு: குடி பிரியர்களை விரட்டிய போலீசார்…!
கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடைகள் இருந்தது . இதில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில அளவில் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கியது.
கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை பத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது.
டாஸ்மாக் மதுபான கடைகளை மூட 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதி டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த கடை மூடிய பின்னரும் அதை அறிய உள்ள பாரில் தொடர்ந்து மதுபான பாட்டில்கள் விற்பனை தொடர்ந்து நடந்து வந்தது .
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கே சென்று பார்த்தபோது பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
பாரில் சிக்கன், குடல் , முட்டை, சுண்டல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போலீசார் உத்தரவிட்டனர்.
கடை மூடிய பின்னரும் பாரில் மதுபாட்டில் வைத்து தொடர்ந்து விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
