கோவையில் ‘கரப்பான் பூச்சி’ குரூப் கண்டன பேரணி…

கோவை காந்திபுரம் வி கே கே மேனன் ரோட்டில் இருந்து பெரியார் படிப்பகம் வரை கோவை மாவட்ட கிளை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (DYFI ) சார்பில் கண்டன பேரணி இன்று நடந்தது.

இதில் சங்கத் தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி போட்டோவுடன் பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

சமீபகாலமாக ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி ‘சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிபதி ஒருவர்
வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சி போல் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள் என பேசி உள்ளார். இந்த பேச்சு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டைபி அமைப்பினர் இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைத்து இளைஞர்களுக்கும் படித்தவர்களுக்கும் கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கல்வி கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.

சோசியல் மீடியா ட்ரெண்டிங் கரப்பான் பூச்சி குழுவினர் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *