Covai Western bypass 2வது பேக்கேஜ் பணிகள் முடக்கம்…!
பைல் போட்டோ
கோவை மாவட்டத்தில் Western bypass road இரண்டாம் கட்டத்திட்ட பணிகள் Tamil Nadu State highways authority வசம் ஒப்படைக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது..
கோவை மாவட்டத்தில் மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 3240 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக பணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இந்த பணிகள் நடந்தது. 28 இடத்தில் மழை நீர் வடிகால் பாலம் மற்றும் 13 இடத்தில் சிறு பாலம் கட்டும் பணி செய்யப்பட்டது.
அடுத்த கட்டமாக 12.4 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோட்டின் 2ம் கட்ட பேக்கேஜ் பணிகள் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாதம்பட்டி முதல் கணுவாய் வரை இந்த ரோடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக 96 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் மாநில நெடுஞ்சாலைத்துறையின் திட்ட பிரிவில் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்திற்கு (டான்சா) இந்த பணிகள் மாற்றம் செய்யப்பட்டது. 2ம் கட்ட பணிகள் 11.8 கி.மீ தூரத்திற்கு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ரோட்டின் நீளம் சற்று மாற்றப்பட்டு வடிவமைப்பிலும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
மேலும் எந்த வகைப்பாட்டில் பணிகள் செய்வது என தெரியாத குழப்பமான சூழல் நிலவுகிறது. வழக்கமாக ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டு பணிகள் நடத்தப்படும். ஆனால் Tamil Nadu State highways authority (டான்சா) பிரிவு ஒப்பந்த நிறுவனமே 80 சதவீதம் தொகை முதலீடு செய்து பணிகள் துவக்க வேண்டும் என விரும்புவதாகவும், இன்னொரு திட்டத்தில் சுங்க மையம் அமைத்து பணிகளை ஒப்பந்த நிறுவனம் செய்ய கால கெடு விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யேலும் இந்த 2ம் கட்ட திட்டத்திற்கு 260 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருந்தது. தற்போது திருத்திய மதிப்பீடு 368 கோடி ரூபாயாக அதிகமாகி விட்டது. நிலம் கையகம் மற்றும் வடிவமைப்பில் மாற்றம் இருந்தால் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,
டான்சா பிரிவிற்கு இன்னும் அலுவலகம் தயாராகவில்லை. மேலும் பொறியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் பைபாஸ் ரோடு 2ம் கட்ட பணிகள் முடங்கி போய் விட்டது. ஆனைகட்டி ரோடு கணுவாய் முதல் நரசிம்ம நாயக்கன் பாளையம் வரையிலான இறுதி கட்ட பைபாஸ் ரோடு 9 கி.மீ தூரம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2ம் கட்ட பணிகள் முடங்கிய நிலையில் 3ம் கட்ட பணிகள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கிறது.
