தமிழகத்தில் ஒரு ஆண்டில் விபத்துகளில் 18 ஆயிரம் பேர் சாவு… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…!
கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் திமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை இன்று தமிழக பொதுப்பணித்து, நெடுஞ்சாலை, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் தொழில்துறை பொருளாதார துறை விவசாயத்துறை முக்கியத்துவம் வரய்ந்ததாக இருக்கிறது. நெடுஞ்சாலை சரியாக இல்லை என்றால் தொழில்துறை சரியாக இருக்காது. பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
மாணவர்கள் இடையே போதை பழக்கம் உருவாகி இருக்கிறது. இதனால் தான் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. அனைத்து மைதானங்களையும் சீர் செய்ய உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி பகுதிகளிலும் அதிக மைதானங்கள் உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுடனும் பேசி மைதானத்தை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
மைதானம் போன்ற பல்வேறு அடிப்படை வசதி இல்லாமல் உள்ளதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் உள்ளனர். அதனால் தான் அவர்கள் பாதை மாறி போதை பழக்கத்தை நோக்கி செல்கின்றனர். கோவை நேரு ஸ்டேடியத்தில் கட்டமைப்பு சரியாக இல்லை பல கோடி ரூபாய் இங்கே செலவு செய்திருக்கிறார்கள்.
சென்னை நேரு ஸ்டேடியம் உலக தரத்தில் உள்ளது போன்று கோவை, நெல்லை, திருச்சி, நாகப்பட்டணம் போன்ற பகுதியில் உலக தர ஸ்போர்ட் சென்டர் உருவாக்கப்படும். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை ஆய்வில் சாலை அமைப்பதை மட்டும் ஒரு வேலையாக பார்த்து வந்தோம். இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் தமிழகத்தில் தான் நடக்கிறது.
அதில் அதிர்ச்சியாக உள்ள விஷயம் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 18,000 பேர் விபத்தில் இறந்துள்ளது தான். இது எங்களுக்கு பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரொனா காலத்தை காட்டிலும் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை எவ்வாறு குறைப்பது என ஆய்வு செய்யப்பட்டது,
விபத்திற்கு வாகனத்தின் வேகம் முக்கிய காரணமாக இருக்கிறது. யு டர்ன், சிக்னல் சரியாக இல்லை. சாலைக்கு மட்டுமின்றி விபத்து பாதுகாப்புக்கும் அதிக தொகை செலவிடப்படும் கேரள மாநிலத்தில் 80 கி.மீ வேகம் சீட் பெல்ட் போடாமல் இருந்தால் அபராதம் போடுகிறார்கள்.
இதனால் கேரள எல்லையில் நுழைந்தால் வாகன வேகத்தை குறைக்கிறார்கள் சீட் பெல்ட் போடுகிறார்கள். தமிழகத்தில் இதை பின்பற்றவில்லை. ஒவ்வொரு வருஷமும் 18 ஆயிரம் பேர் இறப்பது எவ்வளவு பாதிப்பான விசயம்.
இதை போர்கால அடிப்படையில் கடுமையான சட்டத்தின் பேரில் கேரளா, டில்லி அரசு போல் செயல்பட வேண்டும். டிரைவரின் தவறு விபத்துக்கு காரணம் சாலை பாதுகாப்பு 18 ஆயிரம் பேர் இறப்பிற்கு தீர்வாக இருக்கும். கோவையில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் அதிக விபத்து நடந்திருக்கிறது.
ஜிடி நாயுடு பாலம் முடியும் இடத்தில் 5 கி.மீ புதிய மேம்பாலம் கட்ட ஆய்வு செய்தோம். நெடுஞ்சாலைகளில் விபத்துக்கான மருத்துவமனைகளை கட்ட வேண்டும். கடந்த கால டெண்டர்களை ஆய்வு செய்து வருகிறோம். கடந்த ஆண்டு வெளியான டெண்டர்களை நிறுத்தி விட்டோம்.
பாலங்களில் தவறு நடப்பதை தடுக்க 3 நபர் குழு மூலமாக ஆய்வு செய்யப்படும். அரசு துறை காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். 10 ஆண்டு கட்டடங்கள் கூட ரிப்போர் பணிக்கு வருகிறது. கட்டடங்கள் தரமாக கட்ட வேண்டும். அதிக விலை உள்ள இடங்களில் 10 மாடிகள் கொண்ட அரசு கட்டடங்கள் கட்டலாம்.
பெரியார் அறிவுலகம் நல்ல புராஜக்ட் தான். சில குறைகள் கட்டுமானத்தில் உள்ளது அவை சரி செய்யப்படும். கோவையில் அதிக கவனம் செலுத்தப்படும். மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ், மேற்கு பைபாஸ் பணிகள் விரைவாக நடத்தப்படும்.
கோவையில் சாலை பிரச்னை பிரதானமாக இருக்கிறது. அது சரி செய்யப்படும். தவெகவின் கொள்கை தலைவர்கள் தொடர்பாக கேட்ட கேட்ட போது, இப்ப ஆய்வு கூட்டம் நடத்த வந்திருக்கோம். இதுல அரசியல் கேள்வி கேட்காதீங்க என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.
மேலும் கோவை மாவட்டத்தில் அமைச்சர்கள் 2 பேரும் ஆய்வு கூட்டத்திற்கு வரவில்லையே என கேட்டபோது, காலையில் வந்து கோரிக்கை மனு கொடுத்து சென்று விட்டார்கள் அவர்கள் அவர்களின் பணியை செய்கிறார்கள் என்றார்.
