கோயிலுக்கு போற வழிய அடைச்சுட்டாங்க… கோவை கலெக்டரிடம் இந்து முன்னணி புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில்

இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட தலைவர் தசரதன், செய்தி மெதாடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் நேற்று அளித்த புகார் மனுவில், “கோவை மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் வயல் பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விவசாய நிலத்திற்கு அருகிலும் நீர் ஓடையை மறைத்து சட்டவிரோதமாக கல்லறை அமைக்க முயற்சிகள் நடைபெறுகிறது.

ஏற்கனவே கடந்த காலங்களில் மூன்று இடங்களில் கல்லறை தோட்டம் அமைக்க முயற்சி நடந்து, அது தொடர்பாக புகார் வழங்கப்பட்டு

தடுத்து நிறுத்தப்பட்டது. இப்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் மோசடியாக அந்த முயற்சி நடக்கிறது. மலைவாழ் மக்கள் குலதெய்வமான செல்லாண்டியப்பன் கோயில் செல்லும் வழியை அடைத்து அரசு உத்தரவுகளை மீறி நீரோடைக்கு மேல் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களில் அந்தப் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு மோதல்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும் சூழல் உருவானது.

எனவே அத்துமீறல்களையும் சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வெள்ளானைப்பட்டி மா சக்தி நகர் பகுதி மக்கள் அளித்த புகார் மனுவில், “எங்கள் ஏரியாவை சுற்றி நீலம்பூர், முத்துகவுண்டன் புதூர், மைலம்பட்டி பஞ்சாயத்துகளில் குடிநீர், ரோடு வசதி உள்ளது. ஆனால் எங்கள் ஏரியாவில் எந்த வசதியும் செய்யவில்லை.

கிராம சபை கூட்டம் மற்றும் பல்வேறு பகுதியில் நடந்த கூட்டங்களில் இது தொடர்பாக புகார் தந்தோம் ஆனால் அரசு சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 24 ஆண்டுகளாக அடிப்படை வசதிக்கு போராடி கொண்டிருக்கிறோம். ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *