கஞ்சா விற்பனை சீக்கிரம் தடுக்கணும்… மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் உத்தரவு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு, கலால் துறை பணிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன், மாவட்ட எஸ்பி பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ், “மதுபானங்கள், போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பாக விசாரித்தார். அப்போது அவர் மாவட்டத்தில் போதை பொருட்களான கஞ்சா, பான்பராக், குட்கா போன்றவற்றின் விற்பனையை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், போலீசார் இதில் தீவிரம் காட்ட வேண்டும். போதை பொருட்கள் விற்பனை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். கலெக்டர் போதை பொருட்கள் தடுக்க என்ன திட்டங்கள் செய்யப்பட்டது, விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பான செயல் விளக்கம் காண்பித்தார் மாநகர போலீசாருக்கு

கோவை நகரில் விடுதிகளில் பெண்கள் இரவு 9 மணிக்குள் திரும்பி வந்து விடுகிறார்களா என உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. தங்கும் விடுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பிளாட்பார வாசிகள், இரவில் பணி செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு, ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி அருகே மதுபானங்கள், போதை வஸ்துக்கள் விற்பனை செய்யாமல் தடுக்க தீவிரம் காட்டவேண்டும். பள்ளி திறக்கப்படும் நிலையில் கூடுதல் பாதுகாப்பு குறிப்பாக மாணவிகளுக்கு பொது இடங்களில் எதாவது தொந்தரவு இருக்கிறதா என கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு வழங்கப்பட்டது.

டாஸ்மாக், எப்எல் உரிமம் பெற்றவர்கள் முறையாக செயல்பட வேண்டும். கூடுதல் பணம் வசூலித்தல், இரவில் கூடுதல் நேரத்தில் மதுபானம் விற்பனை செய்தல் கூடாது. கலால், டாஸ்மாக் நிர்வாகம் அடிக்கடி கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபான விற்பனையில் இனி பிரச்னை இருக்க கூடாது என இந்த கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *