Bus camara: கோவையில் நடுராத்திரியில் இளம் ஜோடி பஸ்ஸில் லீலை…?!
கோவை வடவள்ளி பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இளம் ஜோடி ஒன்று ஏறியது.
சுடிதார் அணிந்த கையில் வாட்டர் பாட்டில் வைத்திருந்த இளம் பெண் மற்றும் கையில் டாட்டூ போட்ட வட மாநில தோற்றத்தில் இருந்த வாலிபர் அந்த பஸ்சுக்குள் ஏறினார்கள்
அவர்கள் பஸ்ஸில் இருந்த மின் விளக்கை ஆப் செய்துவிட்டு ஒவ்வொரு ஜன்னல் கதவுகளையும் மூடினார்கள். சுமார் 45 நிமிடம் அந்த பஸ்ஸுக்குள் இருவரும் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் பஸ்ஸிலிருந்து வெளியேறினார்கள். பஸ்ஸில் கண்காணிப்பு கேமரா இருந்தது. இந்த கேமராக்களை பார்க்க வாலிபர் அதை விவரமாக ஆப் செய்து விட்டார். ஜன்னல்களை மூடிவிட்டு அடுத்த வேலையை அவர் செய்திருப்பதாக தெரிகிறது.
பின்னர் அவர்கள் பஸ்ஸிலிருந்து வெளியே சென்ற காட்சி அந்தப் பகுதியிலிருந்து வேறொரு கேமராவில் பதிவாகியிருந்தது
யாரும் இல்லாத மினி பஸ்ஸில் நள்ளிரவு நடந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வந்தார்கள் என்பது தெரியவில்லை. வெளியே செல்லும்போது அந்த வாலிபர் பஸ்ஸிலிருந்து சீட் ஒன்றை தூக்கி கொண்டு சென்றுவிட்டார் . மேலும் பஸ்ஸிலிருந்து பேட்டரியும் திருடி எடுத்துச் சென்று விட்டார். இந்த ஜோடி திருட்டு கும்பலா இல்லை வேறு எதற்காக இங்கே வந்தார்கள் மினி பஸ்சுக்குள் ஒதுங்கி ஜாலியாக இருந்தார்களா என சந்தேகம் நிலவுகிறது . இது தொடர்பாக பஸ் டிரைவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த ஜோடிகளின் லீலை தொடர்பான வீடியோ பதிவுகள் பல்வேறு சோசியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
