Women safety: பாதுகாப்பு பணியில் போலீசார் உஷார்… கமிஷனர் தகவல்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:

கோவை மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிங்க் பேட்ரோல் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் எங்கேயாவது குழந்தைகள், பெண்கள் தனியாக நிற்பது பார்த்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரித்து அவர்களை பிங்க பேட்ரோல் போலீசார் காரில் அழைத்து சென்று வீடுகளில் பத்திரமாக ஒப்படைத்து வருகின்றனர்.

அதேபோல விடுதியில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதி காப்பாளர்கள், உரிமையாளர்களுக்கு அறித்தப்பட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் வெளியில் செல்லும்போதும், உள்ளே வரும்போதும் அதைப் பற்றிய விவரங்களை முறையாகப் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள், இளம்பெண்கள் ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, பெற்றோர்களும், விடுதி நிர்வாகமும் தங்களுக்குள் உரியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சூழ்நிலையில், விடுதிக்கு வர வேண்டிய பெண் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி வர தாமதமானால் அது குறித்து விடுதி நிர்வாகம் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதனை பின்பற்றும் போது தனியாக வசிக்க கூடிய பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *