கோவையில் தரம் இல்லாத ரோடு பாலம்: வரும் 15ம் தேதி தணிக்கை ரிப்போர்ட் வெளியீடு…

மதுக்கரை மைல் கல் பாலம்…

கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ரோடு, சிறுபாலம், மேம்பாலம், பழைய ரோடு சீரமைப்பு, மழை நீர் வடிகால், சாலை பாதுகாப்பு கட்டமைப்பு, சந்திப்பு பகுதி மேம்பாடு என பல்வேறு திட்ட பணிகள் நடத்தப்பட்டது.

இந்த பணிகளில், தரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், வேறு கோட்டத்தில் பணி செய்த அதிகாரிகளை வைத்து ரோடு, பாலம் பணிகளில் ஆய்வு நடத்தப்பட்டது தார் களம், கான்கிரீட் மாதிரிகளை ‘கோர் கட்டிங்’ செய்து எடுத்து ஆய்வு செய்தனர். இதில் சில இடங்களில் தார் அளவு, தரம் குறைபாடு இருப்பதாக தெரியவந்தது.

ரோடு போட்டால் அதன் காலாவதி காலம் வரை பழுது ஏற்படக்கூடாது குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ரோட்டின் தரம் குறையாமல் இருக்க வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 5 மாதம் கூட ரோடு தரமாக இருப்பதில்லை. மோசான கட்டுமான பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ரோட்டின் தடிமன் குறைவாக இருக்கிறது. பினிசிங் சரியில்லை, ரோடு சம தளத்தில் இல்லாமல் வளைந்து நெளிந்து போடப்பட்டிருக்கிறது என சில தணிக்கை குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் முடிவுகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினரால் வரும் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதில் தவறு செய்த பொறியாளர்கள், ஒப்பந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரக்கட்டுபாட்டு பிரிவினர் தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தர குறைபாடுகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் மூலமாக சரி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கமிஷன் பெற்றவர்கள். கலக்கமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோடு பாலம் குறைபாடு தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது.

வேலை செய்யும் போது அரசியல், அதிகாரிகள் வட்டாரத்தில் கமிஷன் கேட்டு தொந்தரவு தரமாட்டோம். பணிகளை தரமாக முடிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பில் தொகை வழங்கப்படும் என ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *