முதல்வர் விஜய்க்கு வல்லாரைக் கீரை பார்சல்… 3 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் தமிழ்ப்புலிகள் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் தமிழக முதல்வருக்கு தேர்தல் அறிக்கையை நினைவூட்டும் வகையில் வல்லாரைக் கீரையை இன்று காலை தபால் மூலம் அனுப்ப முயன்றனர். அப்போது அவர்களை ரேஸ் கோர்ஸ் போலீசார் தடுத்து நிறுத்தி மூன்று பேரை கைது செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்: தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமான நிலையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து அரசு பேசுவதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும் முன்வரவில்லை.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அவற்றில் எதுவும் முழுமையாக செயல்படுத்தவில்லை.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அவற்றை முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் தேர்தல் அறிக்கையின் நகலை தபால் மூலம் அனுப்ப முடிவு செய்தோம். மேலும், நினைவாற்றலை மேம்படுத்தும் மூலிகையாக கருதப்படும் வல்லாரைக் கீரையும் இணைத்து அனுப்ப இங்கே வந்தோம் ஆனால் போலீசார் தடுத்து விட்டார்கள் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *