ஆயிரம் ஆண்டுகள் கடந்த புதை உயிரி எலும்பு படிமங்கள்…

மரணத்திற்கு பின் மனித உடல் நிலம், நீர், நெருப்பில் அழிந்து போய் விடும் இறப்பிற்கு பின் மனித உடலை அழியாமல் பாதுகாக்க ஆதிகால மக்கள் ஆர்வம் காட்டினர்.

இதற்காக தாழி, ஈம பேழைகள் உருவாக்கப்பட்டன .இதிலும் 200 முதல் 300 ஆண்டுகள் வரை மட்டுமே மனித எலும்புகளை பாதுகாக்க முடிந்தது. ஆனால் அரிதாக அபூர்வமாக பாறைகளில் சிக்கிய ரசாயன மாற்றத்தால் பாதிக்கப்படாத சில மனித எலும்புகள் புதை உயிரி எலும்பு படிமங்களாக பாசிலைஸ்டு போன் பிரக்மெண்ட் ஆக கிடைந்துள்ளது .

இவை சுடுகாட்டு பொருளாக கருதாமல் பொக்கிஷமாக பாதுகாக்கின்றனர் தொல்லிய துறையினர். மனித எலும்புகள் வரலாற்று சுவடுகளாக இருக்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவை வட்டாரத்தில் ஈம பேழையில் கிடைத்த ஒரு மண்டை ஓடு அறிவியல் துறையின் நீண்ட கால ஆராய்ச்சியில் இருக்கிறது

ஆண்டுதோறும் வேதிப்பொருள் மூலமாக பராமரிக்கப்படும் இந்த மண்டை ஓடு தென் தமிழகத்தின் அபூர்வமாக அகழ் வைப்பகத்தில் காட்சி பொருளாகவும் வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மனிதர்களின் மண்டை ஓடு முட்டை வடிவில் இருக்கும். ஆனால் கோவை அருங்காட்சியகத்தில் உள்ள மண்டை ஓடு வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதனை தற்காலிக மனித மண்டை ஓடுகளுடன் ஒப்பிடுகையில் ஆதிகால மனிதர்களின் மண்டை 20 சதவீதம் வடிவத்தில் பெரிதாக உள்ளது.

இந்த மண்டை ஓடு – 5 கிலோ எடையில் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவினாசி மங்கலம் அருகேயுள்ள வண்ணாத்தங்கரை ஓடை மனித உடல் எலும்புகள் புதை உயிரி படிமங்களாக பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது

கோவை பேரூர் நொய்யல் ஆறு சூலூர் இருகூர் பகுதியில் புதை உயிரி படிமங்களாக தோண்டி எடுக்கப்பட்டன. குத்து பாறைகளுக்கு இடையே பேழை தாழியில் அடக்கப்பட்ட உடல்களில் இருந்து சிதைந்தும் சிதையாமலும் படிவ எலும்புகள் பெறப்பட்டது. எலும்புகளின் கால்சியம் திறன் இரும்பு போன்று உறுதியாக இருந்ததால் இவை எளிதாக அழியாமல் இருந்திருப்பதாக தெரிகிறது.

மேலும் பல நூறு ஆண்டுகள் வரை எலும்புகள் அறியாது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *