தாழியால் உருவான ஊர்

கோவையின் எல்லையில் அமைந்துள்ள வன கிராமம் சாடிவயல்,

எப்போதும் நீர் வளத்துடன் காணப்படும் இந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழிகள் கண்டறியப்பட்டது. இறந்தவர்களை அடக்கம் செய்ய இந்த முது மக்கள் தாழியை ஆதி காலத்தில் சாடி என அழைத்துள்ளனர்.

6 அடி உயரம் மிக்க கூம்பு வடிவிலான இந்த பானையில் இறந்த முன்னோர்களை அடக்கம் செய்துள்ளனர். இந்த பானையில் அடக்கம் செய்து விட்டால் இறந்தவர்களின் ஆத்மா நிம்மதியாக இருக்கும் என கருதினர் . கோவை மாவட்ட தொல்லியல் துறையினர் சாடிவயலில் அகழ்வாராய்ச்சி செய்தபோது இங்கே ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தது .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தின் எலும்புகள் கிடைத்தன சாடிவயலை அடுத்துள்ள நல்லூர் வயலிலும் தாழிகள் கிடைத்துள்ளன . இந்த வட்டாரத்தில் உள்ள மற்றொரு கிராமம் தாளியூர் என அழைக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் இது தாழியூராக இருந்து பின்னர் பெயர் மாறியிருக்கலாம் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் சூலூர் செட்டிபாளையம் கருமத்தம்பட்டி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் முதுமக்கள் தாழி மற்றும் இறந்தவர்களை படுக்கை வசமாக வைத்து அடக்கம் செய்யும் பேழை போன்றவை கிடைத்துள்ளது. மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் தொல்லியல் துறையில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. இதில் ஏகப்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *