பாதாள சாக்கடை வேண்டாம் மாநகராட்சி அலுவலர்களை விரட்டிய மக்கள்

கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை குறுகிவிட்டதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, இச்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன போக்குவரத்தை எளிதாக்கும்படி இப்பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கரும்புக்கடை திப்பு நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சி ஊழியர்கள் சென்றனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், இங்குள்ள

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பாதாள சாக்கடை பணிகளை துவக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு கோஷம் எழுப்பினர். இதனால், மாநகராட்சி ஊழியர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *