கோவையில் தனியார் பார்களில் மோதல் தாக்குதல் உச்சக்கட்டம்…

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடையில் இருந்தது. இவற்றில் 69 டாஸ்மாக் கடையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையை அருகே இருப்பதாக கூறி மூடப்பட்டது. மாவட்ட அளவில் 108 எப்எல்2 என்ற 11 டூ 11 பார்கள், 60க்கும் மேற்பட்ட எப்எல் 3 ஓட்டல் பார்கள் செயல்படுகிறது.

டாஸ்மாக் கடைகள் மூடப்படாத போது இந்த தனியார் பார்களில் கூட்டம் குறைந்தபட்ச அளவில் இருந்தது. டாஸ்மாக் கடைகள் அதிகளவு மூடிய நிலையில் குறிப்பாக முக்கிய பகுதிகளான பஸ் ஸ்டாண்ட் ரயில் நிலையம், வணிக வர்த்தக பகுதிகளில் அதிக விற்பனையான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால் குடி பிரியர்கள் தனியார் பார்களை நாட துவங்கினர். தனியார் பார்கள், டாஸ்மாக் பார்கள் போல் மித மிஞ்சிய கூட்டம் குவிய துவங்கியது.

கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் சுமார் 70 தனியார் பார்கள் இருந்தது. கடந்த 2 ஆண்டில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்த தனியார் பார்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி அனைத்து தரப்பினருக்கும் மதுபானங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக புகார் குவிந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தனியார் பார்களில் அடிக்கடி மோதல் தகராறு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவை நகரில் ஒரு பாரில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த பார் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் இரு தரப்பு குடி பிரியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த பார் மூடி சீல் வைக்கப்பட்டது.

போலீசார் தனியார் பார் உரிமையாளர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினர். அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பார்களை கண்காணிக்க வேண்டிய கவனிக்க வேண்டிய கலால் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் எப்எல்2 மற்றும் எப்எல்3

பார்களில் சட்டவிரோதமான மது விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. நேர விதிமுறை மீறுவது மட்டுமல்லாமல் டாஸ்மாக் கடையிலிருந்து குடோன்களில் இருந்து நேரடியாக மதுபானங்களை இங்கே அனுப்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் பார்களில் வைக்கப்படும் மதுபானங்களுக்கு முறையான கணக்குகள் கையாளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எப்எல் கடைகளுக்கு கூடுதல் கலால் வரியில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. இந்த வரியை ஏய்ப்பு செய்யும் வகையில் டாஸ்மாக் மதுபானங்களை முறைகேடாக, எப்எல் பார்களுக்கு சப்ளை செய்வதாக தெரிகிறது. இது தொடர்பாக தணிக்கை ஆய்வு நடப்பதில்லை.

தனியார் மனமகிழ் மன்ற உறுப்பினர் அல்லாதவர்களை ஆதார் எண் வாங்கி அவசரமாக உறுப்பினராக சேர்க்கும் பணியும் தீவிரமாக நடக்கிறது. பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தும் கலால் துறை கண்டு கொள்ளவில்லை.

டாஸ்மாக் பார்க் மூடப்பட்ட பகுதிகளில் தனியார் பார்களில் கூட்டம் அதிகமாகி மோதல் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் எண்ணிக்கையை குறைத்து தனியார் பார்களில் கூட்டம் அதிகரிக்கும் நோக்கத்தில் கலால் துறை செயல்பட்டு இருக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளது. மது குடிப்போர் எண்ணிக்கை குறையாத நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடியதால் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை மது போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகமாகி விட்டார்கள்.

மதுபானங்களை தேடி வெகு தூரம் செல்கிறார்கள். இதனால் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவேண்டும். விபத்துக்களை குறைக்க மோதல்களை தடுக்க முயற்சிக்க வேண்டும். பின் விளைவுகளை தடுக்கும் வகையில் மதுபான கடைகளுக்கு முடிவு எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *