கோவையில் மின்வாரியத்தில் வேலை தருவதாக மோசடி…

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் சாந்தநாயகி, இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி காலை சாந்தநாயகி சின்னியம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு சிலர் வந்திருந்தனர். அவர்கள் கையில் போலி பணி ஆணை வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரணை செய்த போது அவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அரசு | முத்திரைகள் மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்து, மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாந்தநாயகி பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? அவர்கள் எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *