முதல்வர் விஜய் கோவை வருகை… ட்ரோன் பறக்க தடை
தமிழக முதல்வர் விஜய் நாளை (4ம் தேதி ) கோவை வரவுள்ளார். விமானம் மூலமாக சென்னையிலிருந்து வரும் அவர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செல்வதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், ஹோப் கல்லூரி, எஸ்.ஐ.ஹச்.எஸ் காலனி, ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகள்
மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புற காவல் நிலையம், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, சூலூர் ஜங்சன், சூலூர் புதிய பேருந்து நிலையம் காங்கேயம்பாளையம் சந்திப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் வரும் 5ம் தேதி காலை 9 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
விதிகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்படுகிறது.

Honestly one of the best platforms I have used lately. The game variety is insane and the bonuses are actually helpful. Highly recommend phwwwcasinoplus for anyone who loves action.
This is exactly what I was looking for. The promos are generous and the gameplay is genuinely exciting. My new favorite is 77pinas08