கோவை பேரூராட்சிகளில் கழிவுகள் அகற்ற 14 வாகனங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் கழிவு அகற்றும் பணிக்காக 14 வாகனங்கள் பெறப்பட உள்ளது. 63 லட்சம் செலவில் இந்த வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. கோவை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக இதற்கான டெண்டர் அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது . வரும் 15ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வாகனங்கள் பெறப்படும். பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பை மற்றும் பல்வேறு திடக்கழிவுகளை அகற்றவும் உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *