பைபாஸ் ரோட்டை அபகரித்த எம்டிஎஸ் பேக்கரி, சரவணபவன்… கலெக்டர் நோட்டீசையும் மீறி அத்துமீறல்…!
சிறப்பு நிருபர் ஜெய்… 98432 20006

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் ஈச்சனாரி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சம்பந்தமான இடங்களை அபகரித்து ஆக்கிரமித்து கடைகளைப் போட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக வியாபாரம் நடத்தி வரும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் National Highway authority (NHAI) உள்ளாட்சி நிர்வாகங்கள் போன்றவற்றிற்கு புகார் சென்றது.
இதன் அடிப்படையில் பல ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஈச்சனாரி சந்திப்பு பகுதியில் எம்டிஎஸ் பேக்கரி அதிக அளவு இடத்தை அபகரித்து அங்கே கட்டிடம் உருவாக்கி பேக்கரி கடை நடத்தி வரும் தகவல் தெரிய வந்தது. பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்யும் இவர்கள் அரசாங்கத்தின் சொத்து என தெரிந்தும் அபகரித்து மின் இணைப்பு வாங்கி குடிநீர் இணைப்பு மற்றும் பல்வேறு வசதிகளை உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற்று கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சரவண பவன் ஹோட்டல், மற்றொரு டீக்கடை, பழமுதிர் நிலையம், fe grill ரெஸ்டாரன்ட், தமிழ்நாடு ஹோட்டல் போன்ற வியாபார கடைகளும் தங்கள் பங்கிற்கு கணிசமான இடங்களை அபகரித்து கட்டடங்களை உருவாக்கியுள்ளது. இந்த மோசடிக்கு அப்போதிலிருந்து இப்போது வரை பல்வேறு தரப்பு அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடந்தையாக இருந்து வந்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு அபகரிப்பிற்கு கைமாறாக யார் யார் பலன் பெற்றார்கள் என்ற விபரங்களும் வெளியாகி இருக்கிறது. இதெல்லாம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெளிவாக புகாராக சென்று இருக்கிறது. பல கோடி ரூபாய் மோசடி செய்த பைபாஸ் ரோட்டில் உள்ள 22 வணிக வர்த்தக கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பவன் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் கெடுக்காலம் நிறைவடைந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பு கும்பல் கடைகளை காலி செய்ய மறுத்து தாமதம் செய்து வருகிறது. அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கட்டடங்களை இடிக்க வேண்டும். இதனை ஆண்டுகாலம் நெடுஞ்சாலை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்த இந்த நபர்கள் மீது அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது. குறிப்பாக ஈச்சனாரி சந்திப்பு பகுதியில் அந்த சிக்னலை கடப்பதற்கு மக்கள் படாத பாடுபடுகிறார்கள் ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் கிடைத்த இடத்தை அபகரித்து ஆக்கிரமித்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என வியாபாரிகள் களம் இறங்கி இருப்பது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. தவறு செய்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பக்கூடாது. கடும் நடவடிக்கை மட்டுமே அடுத்த தவறுகளை தடுக்கும் என மக்கள் தெரிவித்தனர்.

Finally found a reliable link that actually works without any lag. The login process is super straightforward and secure. Cheers to perabetcasinologin.