பெண்ணை கட்டி போட்டு பாலியல் பலாத்காரம்… கைதான நபரின் பின்னணி குறித்து விசாரணை

பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட திருப்பூர் தொழிலதிபர் வலையில் வேறு பெண்கள் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்து விட்டார் இந்த நிலையில், அந்த பெண்ணின் எதிர்காலம் கருதி அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவெடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு திருமண வரன் குறித்த வலைதளம் மூலம் திருப்பூர் ராயபுரம்.

ரங்கநாதபுரம் 2 வது வீதியைச் சேர்ந்த ராம்குமார் (45) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பழகி உள்ளார். பின்னர், அவரது வீட்டுக்கு சென்றவர் ராம்குமார், அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே, அவரை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தவிர, அவரிடம் 5 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.

அதேபோல, சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராம்குமாரின் மனைவி வைதேகி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் ராம்குமாரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கும் அந்த மோசடியில் தொடர்பு உள்ளதா?, ராம்குமாரின் மோசடியில் வேறு ஏதாவது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

One thought on “பெண்ணை கட்டி போட்டு பாலியல் பலாத்காரம்… கைதான நபரின் பின்னணி குறித்து விசாரணை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *