தமிழக சுற்றுலாத்துறை புதிய வெப்சைட் துவக்கம்…
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான முயற்சிகளை பயன்படுத்தி சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் இன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் துவங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட கலெக்டர் பவன்குமார், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் சேக் மன்சூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, சுற்றுலா தொழில் முனைவோர்கள். சுற்றுலத்தொழில் சார்ந்தவர்கள், பயண முகவர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவ மாணவிகள், சுற்றுலாத்துறை வல்லுநர்கள் மற்றும் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர், புதுப்பிக்கப்பட்ட சுற்றுலாத்துறை இணையதளம் மற்றும் கைப்பேசி செயலிகள், தமிழ்நாடு சுற்றுலா சுற்றுப்பாதைகள் தொடர்பான ஏஐ காணொளிகள், ஸ்டார்ட்அப் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் “இன்னோவேஷன் சேலஞ் 2026” ஆகியவற்றை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது: அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது திருமூர்த்தி அணையில் பூங்காவினை ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி மற்றும் உள்கட்டமைப்பு ஏஐ தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தபட உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ரூ. 2 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள். அமைக்கப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை இணையதளம் ஏற்கனவே இருந்தாலும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு அதனை விரிவுப்படுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கியமான பகுதியாக கோவை இருக்கிறது.
இந்த புதுப்பிக்கப்பட்ட சுற்றுலாத்துறையின் www.ttdcbooking.com என்ற இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதான முன்பதிவு அனுபவத்தை வழங்கும். விடுதிகள், சுற்றுலா திட்டங்கள் மற்றும் படகு இல்லங்களை பார்வையிட்டு, நிகழ்நேர அறை இருப்பு விவரங்களை அறிந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். ஓடிபி சரிபார்ப்பு மற்றும் கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு சீட்டு உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். மேலும், சுற்றுலாத் தலங்கள் கோயில்கள். கடற்கரைகள் மற்றும் மலைவாசஸ்தலங்கள் குறித்த தகவல்களை ஒரே தளத்தில் அணுகி பயணத்தை எளிதாகத் திட்டமிடும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Really glad I stumbled upon this platform. The user interface is clean and it doesn’t lag even during peak hours. Great job on the optimization of phta903.
The jackpot hits here feel way more frequent than on other sites. It is such a thrill every time I spin. I am totally hooked on slotmax.
Such a fantastic atmosphere and the game selection is top notch. It feels like a real casino experience right from my phone. Visit jilipark22casino