30 பாலியல் வழக்குகளில் தவெகவினர் தொடர்பு… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…
தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்கில் 30 க்கும் மேற்பட்ட வழக்கில் த வெ.க.வை சேர்ந்தவர்களே உள்ளனர் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்டிஜயில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. இந்த அமைச்சர்களாலும், முதலமைச்சராலும் தீர்மானமான முடிவுகளை எடுக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் மக்களுக்கான திட்டங்கள், மக்களுக்கான குறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து யாரும் பேசவில்லை.
அவர்களுடைய சொந்த பிரச்னைகளைத்தான் பேசி வருகின்றனர். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆர்டிஐ சட்டம் என்பது ஒரு நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக மக்களின் அடிப்படை சுதந்திரமாக கருதப்பட்டது. இவர்கள் ஒரு அரசாணையை போடுவது, அதனை மீண்டும் வாபஸ் வாங்குவது என்பதெல்லாம் கண்டிக்கத்தக்கது. இது அவர்களது நிர்வாகத் திறமையை வெளிக்காட்டுகிறது.
தமிழகத்தில் தெரிந்தோ தெரியாமலோ 107 சீட்டுகளில் ஜெயித்துள்ளார்கள். அவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது எல்லாம் தவறு கிடையாது. அந்தத் தகுதியும், திறமையும் அவர்களுக்கு உள்ளதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். த.வெ.க. எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள்? தற்போது வரை ரூ.2,500 வழங்கப்படவில்லை. சட்டம் – ஒழுங்கை பாதுகாத்துள்ளார்களா? இதுவரை 150-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் த.வெ.க.வை சேர்ந்தவர்களே உள்ளார்கள் 200 க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளது.
கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது குடிசை கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

The login process is seamless and the security makes me feel safe. I had a great run last night and the customer support was very helpful. Give ph55bmwapploginakp a shot!
I’ve been trying a few different sites lately and this one really stands out. The games load fast and the payouts are legit. Definitely my new favorite spot for spinning pk44slots.
Everything is straightforward and easy to navigate. I love how quick the registration is. Give bdbb44login a try if you want something simple.