குற்றவாளிகளை பிடிக்க காரில் தொங்கி சென்ற போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு…
கோவை கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர் வேல்முருகன்.
இவர் இன்று காலை போலீசாருடன் அந்த பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதே கார் ஒன்று போதை பாக்குடன் வந்தது. அதனை மடக்கி பிடித்து நிறுத்த வேல்முருகன் முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் கார் புறப்பட்டது. இந்த நிலையில் வேல்முருகன் கார் மீது பாய்ந்து ஏறினார். காரின் மேல் பகுதியில் உள்ள லக்கேஜ் வைக்கும் ஸ்டாண்ட் பகுதியை பிடித்துக் கொண்டார்.
அப்போதும் கார் நிறுத்தவில்லை. காரில் இருந்த நபர்கள் வேகமாக காரை ஓட்டி சென்றனர் .கார் விளாங்குறிச்சி அவிநாசி ரோடு கணியூர் சுங்கச்சாவடி தாண்டி சென்றது. பின்னர் அவிநாசி பகுதியில் அந்த காரை போலீசார் மடக்கி பிரித்தனர்.
போலீஸ் ஏட்டு வேல்முருகன் காரில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோவை போலீசார் பதிவு செய்தனர் . இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது ட்ரெண்டிங் ஆனது. இதை பார்த்த பொதுமக்கள் பலர் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ் ஏட்டுவிற்கு பாராட்டு தெரிவித்தனர. சிலர் 40 கிலோ மீட்டர் தூரம் காரில் ஏன் தொந்தியபடி ஆபத்தாக அவர் பயணம் செய்தார். பின்னால் துரத்தியபடி சென்ற போலீசார் ஏன் விரைவாக மடக்கி பிடிக்கவில்லை.
தகவல் தெரிவித்து இருந்தால் மற்ற பகுதியில் உள்ள போலீசார் வந்து ரோட்டில் நின்று மடக்கி பிடித்து இருப்பார்கள். இல்லாவிட்டால் குற்றவாளிகளின் கார் டயரில் சுட்டு இருந்தால் கார் நின்றிருக்கும் கார் மேல் படுத்திருந்த போலீஸ் ஏட்டுக்கு ஏதாவது ஆகி இருந்தால் பின் தொடர்ந்து வாகனத்தில் சென்ற போலீசார் மீது தன் புகார் சொல்லி இருப்பார்கள். எனவே போலீசார் 40 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றது வீணான செயல். அவர்கள் விரைவாக மடக்கிப் பிடித்து இருக்க வேண்டும் என எதிர்ப்பு காட்டி இருந்தனர்.
இந்த வீடியோ விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜஸ்தான் மாநிலம் ராஜேஷ், பாபு தாரா, சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து 170 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இதற்கு தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஏட்டு வேல்முருகனை வீடியோ காலில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். ஆனால் இதுபோல் ரிஸ்க்கான செயலை செய்யக்கூடாது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் வாழ்த்தினார். இதேபோல் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷும் செல்போனில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Really impressed with the interface here. Everything is laid out perfectly and the loading speeds are impressive. Great spot for anyone looking for a reliable site. c333com
The login process is seamless and I didn’t encounter any lags during my session. Great experience overall with cwdbetlogin. Keep it up guys!