கோவை நகரில் தீபாவளி பர்சேஸ் கூட்டம் குவிகிறது…
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது கோவை
நகரில் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி,வைசியாள் வீதி, காந்திபுரம் 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஆர்எஸ் புரம் டிபி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல்வேறு வியாபார கடைகளில் தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு விற்பனையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக துணிக்கடைவீட்டு உபயோக பொருட்கள், ஆட்டோமொபைல் விற்பனை கூடங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வணிக வர்த்தக பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு தன்னார்வ அமைப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவை நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக கடைவீதி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். நாட்டு நலப்பணி திட்டத்தினர் சாலை பாதுகாப்பு பணி போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் பார்க்கிங் அகற்றப்படும். கூடுதல் நடைபாதை அமைக்கப்படும்.
வாட்ச் டவர் அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் மக்கள் பாதுகாப்பாக ரோட்டில் செல்ல பேரி கார்டுகள் அமைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோட்டில் வாட்ச் டவர் அமைக்க போகிறார்கள். கடை வீதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் தினமும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

This place has such a fun vibe and the bonuses are actually generous. It is my new favorite way to unwind after work. Cheers to phokfunph for the awesome service.
The mobile experience is just perfect. I can play anywhere and anytime without any glitches. 4444winapp is a total game changer.
Finally found a reliable place to play. The login process at 96xbajeelogin is quick and I never have any issues accessing my account.