பெரியார் நூலகத்தில் ‘நான் முதல்வன்’ நீக்கம்…
கோவை பெரியார் நூலகம் வளாகத்தில் நான் முதல்வன்’ திட்டம் மறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மேகாவை காந்திபரப நினடை அருகே ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் என்னும் பெயரில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானம் நடந்தது. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், அப்போது 100 சதவீத பணிகள் நிறைவண யாத காரணத்தால், இந்நூலகத்தை நேரில் பார்வையிட்ட அப்போதைய முதல்வர் மு.கஸ்டாலின், “மொத்த பணிகளும் முடிந்த பின்னர்தான் திறப்புவிழா நடத்த வேண்டும். அவசரப்பட்டு திறக்க வேண்டாம்’ என தெரிவித்து விட்டார்.
அதனால், அந்த சமயத்தில் திறப்பு விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதன்பிறகு மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு, இன்று திறப்பு விழா காண உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது “நான் முதல்வன்” திட்டம் மிகவும் பிரபலமாக இருந்தது.
மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலான இந்த திட்டத்தை, மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், இந்நூலக வளாகத்தில் முதல் களத்தில் பிரம்மிடு வடிவில் கம்ப்யூட்டர் மேஜை அமைக்கப்பட்டு, அதில் “நான் முதல்வர்” என்ற வாசகம் மற்றும் லோகோ அச்சிடப்பட்டு இருந்தது.
ஆனால், இதை தற்போதைய தவெக ஆட்சியினர் மூடி மறைத்து விட்டனர். கடந்த திமுக ஆட்சியின் எந்த அடையாளமும் தெரியக்கூடாது, குறிப்பாக, பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் இருக்கக்கூடாது எனக்கருதி “நான் முதல்வன்” பெயரையும் லோகோவையும் மறைத்துள்ளனர்.
இந்நூலகத்தில், 50 கோடி ரூபாய்க்கு 1.25 லட்சம் புதிய புத்தகங்கள் வாங்கி பயன்பாட்டில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால், நேற்று வரை சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே வந்துள்ளது. பருவ இதழ்கள் பகுதி மொத்தமாக காலியாக கிடக்கிறது.
அறிவியல் மையம் தொழில் முனைவோர் மையம் காலியாக உள்ளது. இங்குள்ள பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடக்கிறது. போட்டித்தேர்வு, தமிழ் ஆங்கில நூல்கள் பகுதியில் கணிசமான புத்தகங்கள் இல்லை. பல ரேக்குகள் சும்மா காட்சி பொருளாக இருக்கிறது. அவசர கதியில் புத்தகங்களை வாங்கி, அடுக்கி வைக்கும் பணிகள் நடந்துள்ளது.

The odds here are actually quite competitive compared to others I’ve used. Everything feels legit and the support team is very helpful. Give ph365ph a try.
Absolutely loving the vibe and the winning streaks I’ve had here. Definitely my new favorite spot. Visit pkxxxx555 for some action!