கோவை மாநகராட்சியில் ஏ ஐ வீடியோ போட்டும் குப்பை தரம் பிரிக்க மாட்டேங்குறாங்க…

கோவை மாநகராட்சி சார்பில் குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து பெற்று வருகின்றனர். ஆனால் பலரும் வேலைக்கு செல்லும் அவசரம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

சிலர் குப்பைகளை சாலையோரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி ஏ.ஐ வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டது. பள்ளிக்கு சிறுமி ஒருவர் தனது பாட்டியிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விளக்குகிறார்.

இதில் உணவு, பழ தோல்கள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை பச்சை நிற கூடையில் போட வேண்டும் என்றும், காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை நில நிற கூடையில் போட வேண்டும் என்றும், நாப்கின் உள்ளிட்ட சுகாதார குப்பைகளை சிவப்பு நிற கூடையில் போட வேண்டும் என்றும், எலக்ட்ரிக் கழிவுகளை கருப்பு நிற கூடையில் போட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் சுத்தமான, சுகாதாரமான கோவையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிறுமி கூறுகிறார். மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் குப்பை தரம் பிரித்து மக்கள் வழங்க முன் வராமல் இருப்பதாக தெரிகிறது. வீடியோ பார்த்து விட்டு விட்டார்கள். இந்த திட்டத்தில் முன்னேற்றமின்றி தோல்வி தான் கிடைத்துள்ளது.

3 thoughts on “கோவை மாநகராட்சியில் ஏ ஐ வீடியோ போட்டும் குப்பை தரம் பிரிக்க மாட்டேங்குறாங்க…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *